UPDATED : ஜன 23, 2025 12:00 AM
ADDED : ஜன 23, 2025 10:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
வானில் ஆறு கோள்கள் நேர்கோட்டில் வந்துள்ளதை, திருப்பூரில் பொதுமக்கள் நுண்ணோக்கி மூலம் பார்த்து ரசித்தனர்.
கோள்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு வட்டபாதையில் சுழன்றபடி, சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில், சில சமயங்களில் கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வம் நிகழும். அவ்வகையில், நேற்று வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேன்ஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தது.
வானில் நடக்கும் இந்த அதிசயத்தை காண, திருப்பூரை சேர்ந்த விண்வெளி ஆர்வலர்கள் ரவிக்குமார், முருகவேல், கீதாமணி ஆகியோர் தாராபுரம் ரோடு, கிருஷ்ணா நகரில் நேற்று இரவு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வானில் நடக்கும் இந்த அற்புதத்தை நுண்ணோக்கி வழியே குழந்தைகள் முதல் பெரியவர் வரை என, பலரும் கண்டு ரசித்தனர்.