UPDATED : ஏப் 27, 2026 06:43 PM
ADDED : ஏப் 27, 2026 06:44 PM
பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பள்ளி குழந்தைகளுக்கான கோடைகால ஆளுமை பயிற்சி முகாம் நடக்கிறது.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி விவேகானந்தர் பண்பாடு மற்றும் பாரம்பரிய மையத்தின் சார்பில், மே மாதம், 6ம் தேதி முதல், 13ம் தேதி வரை, சுவாமி விவேகானந்தர் பண்பாடு மற்றும் பாரம்பரிய மையத்தில் தினசரி காலை, 09:00 மணி முதல் நண்பகல், 12:00 மணி வரை முகாம் நடக்கிறது. இதில், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஆண், பெண் குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.
முகாமில், பிரார்த்தனை, கையெழுத்து மற்றும் ஓவிய பயிற்சி, தேசபக்தியை வளர்த்தல், நுண்ணறிவு திறன் கண்டறிதல், தியானம், யோகா, மூச்சு பயிற்சி, புராண கதாபாத்திர அறிமுகம், நினைவாற்றலை கண்டறிதல், மேம்படுத்துதல், பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதித்தல், பாரம்பரிய நன்னெறி விளையாட்டுகள், அணுகுமுறை, படைப்பாற்றல் திறன், பண்டைய கலாச்சார விழிப்புணர்வு, வாழ்க்கை திறன் மேம்பாடு ஆகியவை கற்றுத் தரப்படுகிறது.
முகாமில், பங்கேற்க விரும்புபவர்கள், 94862 36995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
