உடல் நலம் பாதித்த ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு கோரி மனு
உடல் நலம் பாதித்த ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு கோரி மனு
UPDATED : பிப் 07, 2025 12:00 AM
ADDED : பிப் 07, 2025 10:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
உடல் நலம் பாதித்த ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் டி.இ.ஓ., வசந்தாவிடம் மனு அளித்தனர்.
மனுவில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர் நியமனத்தில் மூத்த பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும். டிரஸ்ட், எம்.எம்.எம்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு பணியமர்த்தாமல் சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும். உடல் நலம், சர்க்கரை நோய் பாதித்த, ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.