UPDATED : டிச 19, 2024 12:00 AM
ADDED : டிச 19, 2024 10:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி:
போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சிறக்காடு மலைக் கிராமம். போடியில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் அமைந்து உள்ளது.
40 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் உள்ளனர். ரோடு வசதி இருந்தும் பஸ் வசதி இல்லை. இதனால் இங்கு உள்ள 32 மாணவர்கள் போடியில் உள்ள பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனர். ஆட்டோவில் செல்வதால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் சிலர் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாமில் கலந்து கொண்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் மலைக் கிராம மக்கள், மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளி நேரங்களில் மினி பஸ் விட வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.