தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுகலை நீட் தேர்வு; 95 சதவீதம் பேர் பங்கேற்பு

முதுகலை நீட் தேர்வு; 95 சதவீதம் பேர் பங்கேற்பு

முதுகலை நீட் தேர்வு; 95 சதவீதம் பேர் பங்கேற்பு


UPDATED : ஆக 31, 2026 02:42 PM

ADDED : ஆக 31, 2026 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 02:42 PM ADDED : ஆக 31, 2026 02:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கோவையில் 19 மையங்களில் நடந்தது. 4,393 பேர் விண்ணப்பித்தனர். 4,167 பேர் தேர்வு எழுதினர்; 226 பேர் பங்கேற்கவில்லை.

காலை 09:00 மணி தேர்வுக்கு, 07:00 மணியில் இருந்து தேர்வர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். 12:30க்கு தேர்வு முடிந்தது. தேர்வு ஆன்லைனில் நடந்தது. மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு நடந்த இத்தேர்வில், ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண், தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் இழப்பு என்ற முறையில் 200 கேள்விகள் இடம்பெற்றன.

கிளினிக்கல், ப்ரீ கிளினிக்கல், பாரா கிளினிக்கல் ஆகிய பிரிவுகளில், விருப்ப உயர்க்கல்வி பாடங்களுக்கு ஏற்ப, தேர்வு வினாக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. கோவையில் எந்த தேர்வு முறைகேடும் நடக்கவில்லை என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us