UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 04:03 PM

ஐதராபாத்தில் செயல்படும் 'சென்டர் பார் எக்னாமிக் அண்டு சோசியல் ஸ்டடீஸ் - சி.இ.எஸ்.எஸ்.,' கல்வி நிறுவனம் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறிமுகம்
ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'இந்தியன் கவுன்சில் பார் சோசியல் சயின்ஸ் ரிசர்ச்' அமைப்பின் ஆதரவுடன் தன்னாட்சி நிறுவனமாக செயல்படும் சி.இ.எஸ்.எஸ்., பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நிஷாமாபாத்தில் உள்ள தெலுங்கானா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்:
எக்னாமிக்ஸ்
சோசியாலஜி / ஆந்த்ரோபாலஜி / சோசியல் வொர்க்
பொலிட்டிக்கல் சயின்ஸ் / பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்
காமர்ஸ் / பிசினஸ் மேனேஜ்மெண்ட்
தகுதிகள்:
யு.ஜி.சி.,யின் சமீபத்திய அறிவிப்பின் படி, ஜே.ஆர்.எப்., நெட் மற்றும் நேர்முகத் தேர்வுகளின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆகஸ்ட் 20
விபரங்களுக்கு:
https://cess.ac.in/