UPDATED : அக் 30, 2024 12:00 AM
ADDED : அக் 30, 2024 01:07 PM

ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., எனும் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்'சில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
துறைகள்:
பயோலஜி, கெமிஸ்ட்ரி, மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ், டேட்டா சயின்சஸ், எர்த், என்விரான்மெண்டல் அண்டு சஸ்டயினபிலிட்டி சயின்சஸ் உட்பட பல்வேறு துறைகள்.
விண்ணப்பிக்கும் முறை:
https://admissions.iisertvm.ac.in/phd/index.php/applicant/register/15 எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
நவம்பர் 17
விபரங்களுக்கு:
https://admissions.iisertvm.ac.in/phd/index.php/application/view-ad/15
ஆர்.ஜி.சி.பி.,
மத்திய அரசால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'ராஜீவ்காந்தி சென்டர் பார் பயோடெக்னாலஜி', ஜனவரி 2025 அமர்விற்கான பிஎச்.டி., படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரிவுகள்:
டிசீஸ் பயோலஜி, நியூரோபயோலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ் மற்றும் பிளான்ட் சயின்ஸ்.
தகுதிகள்:
உரிய துறையில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்று முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். ஜே.ஆர்.எப்., தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.
வயதுவரம்பு:
ஜூலை 1, 2024 தேதியின்படி 26 வயதிற்குள் இருத்தல் வேண்டும். 28 வயதிற்குள் உள்ள எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
நவம்பர் 27
விபரங்களுக்கு:
https://rgcb.res.in/phd2024-Nov/