அரசு பள்ளி அட்மிஷன் பேனரில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம்
அரசு பள்ளி அட்மிஷன் பேனரில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம்
UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
எம்.ஜி.ஆர்., நகர், லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், தேர்தல் பறக்கும் படையினரும், தேர்தல் விதிகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன், அரசு விளம்பரம் மற்றும் போஸ்டர்களில் உள்ள முதல்வர் படத்தை மறைத்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர்., நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 'குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்; எதிர்காலத்தை வளமாக்குவோம்' என்ற வாசகத்துடன், மாணவர்கள் சேர்க்கைக்கான பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளன.
இது, தேர்தல் விதிகளை மீறுவதாக பிற கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.