தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆரோக்கியத்துக்கு வித்திடும் உடற்கல்வி படிப்புகள்

ஆரோக்கியத்துக்கு வித்திடும் உடற்கல்வி படிப்புகள்

ஆரோக்கியத்துக்கு வித்திடும் உடற்கல்வி படிப்புகள்


UPDATED : மார் 27, 2026 06:24 PM

ADDED : மார் 27, 2026 06:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 06:24 PM ADDED : மார் 27, 2026 06:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை அருகே உள்ள மேலகோட்டையூரில், மாநில அரசின் பல்கலைக்கழக அந்தஸ்துடன் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுநிலை பட்டப்படிப்புகள் - 2 ஆண்டுகள்



படிப்பு:
எம்.பி.எட்., உடற்கல்வியியல்

தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.பி.எட்., படித்திருக்க வேண்டும். குறைந்தது, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும்.

படிப்பு:
எம்.டெக்., விளையாட்டு தொழில்நுட்பம்.

தகுதி:
பி.இ., அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

படிப்பு:
எம்.எஸ்சி. , விளையாட்டு உயிரி இயந்திரவியல் மற்றும் இயக்கவியல்.

தகுதி:
அறிவியல், உடற்கல்வி, பொறியியல், பிசியோதெரபி போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு.

படிப்பு:
எம்.பி.ஏ., விளையாட்டு மேலாண்மை

தகுதி:
ஏதேனும் ஒரு இளநிலைப்பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி

படிப்பு:
எம்.எஸ்.சி., விளையாட்டு பயிற்சி

தகுதி:
இளநிலை பட்டப்படிப்புடன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் பிரிவில் டிப்ளமா அல்லது முதுநிலை டிப்ளமா படிப்பு.

படிப்பு:
எம்.எஸ்.சி., உடற்பயிற்சி உடலியல் மற்றும் ஊட்டச்சத்து

தகுதி:
ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு

படிப்புகள்:
எம்.எஸ்.சி., யோகா, எம்.எஸ்சி., விளையாட்டு உளவியல் மற்றும் சமூகவியல், எம்.எஸ்.சி., விளையாட்டு உளவியல்

தகுதி:
ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு

விபரங்களுக்கு:
www.tnpesu.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us