UPDATED : ஏப் 15, 2024 12:00 AM
ADDED : ஏப் 15, 2024 09:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், மூன்றாம் ஆண்டு இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் பரணிகுமார் வரவேற்றார்.
வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயலட்சுமி சன்யால் முன்னுரை வழங்கினார். முகாமில், தேர்வான 300 மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.