பிளஸ் 1, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் துவக்கம்
பிளஸ் 1, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் துவக்கம்
UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 10:24 AM

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்கி, 25ல் நிறைவு பெற்றது. தேர்வை, 23,334 மாணவ--மாணவியர் எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 26,683 பேர் எழுதினர்.
பிளஸ் 1 விடைத்தாள் திருத்தப்பணி, ஈரோடு ஜேசிஸ் மெட்ரிக் பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக், கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி என மூன்று மையங்களில் நடந்தது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களாக பெருந்துறை கங்கா பள்ளி, சத்தி ராகவேந்திரா பள்ளி, கோபி என மூன்று மையங்கள் அமைக்கப்பட்டன.
10ம் வகுப்பு விடைத்தாள் கடந்த, 12ம் தேதி முதலும், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தம், 15ம் தேதி முதல் துவங்கியது. இதற்கிடையில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு பணியால், ஆசிரியை, ஆசிரியர்களுக்கு, 18ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்த நிலையில் நேற்று முதல் ஆசிரியர்கள் வழக்கமான பணிக்கு திரும்பினர். இதனால் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் மீண்டும் தொடங்கியது.