UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 10:08 AM
சேலம் :
சேலம் மாவட்டத்தில், 17,713 மாணவர், 20,117 மாணவியர் என, 37,830 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். அதன் முடிவு நேற்று வெளியானது. அதில் 15,509 மாணவர், 19,028 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 91.30 சதவீதம். மாணவர்களின் தேர்ச்சி, 87.56, மாணவியரின் தேர்ச்சி, 94.59 சதவீதம்.
கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வில், 93.15 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், நடப்பாண்டு, 1.85 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 160 பள்ளிகளை சேர்ந்த, 9,052 மாணவர்கள், 12,130 மாணவியர் என, 21,182 பேர் தேர்வு எழுதினர். அதில், 7,362 மாணவர், 11,184 மாணவியர் என, 18,546 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் சதவீதம், 87.56. மேலும் இத்தேர்வில் அரசு பள்ளிகள் - 8, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் - 2, தனியார் பள்ளிகள் - 59 என, 69 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
கைதிகள்
சேலம் மத்திய சிறை கைதிகள், 13 பேர், பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். அதில், 10 கைதிகள் தேர்ச்சி பெற்றனர்.