பயிற்சி மையத்தில் பிளஸ் 1 மாணவனுக்கு கத்திகுத்து; மலப்புரத்தில் பயங்கரம்
பயிற்சி மையத்தில் பிளஸ் 1 மாணவனுக்கு கத்திகுத்து; மலப்புரத்தில் பயங்கரம்
UPDATED : நவ 02, 2024 12:00 AM
ADDED : நவ 02, 2024 11:52 AM
மலப்புரம்:
கேரளாவில் பயிற்சி மையத்தில் மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் பயிற்சி மையத்தில் பயின்று வந்த பிளஸ் 1 மாணவனை சக மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பயிற்சி மையத்தில் அமர்ந்திருந்த பிளஸ் 1 மாணவனை, அங்கு கத்தியுடன் வந்த சக பிளஸ் 1 மாணவன் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதில், மாணவனின் இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதைபதைத்துப் போன சக மாணவர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர், மாணவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரு மாணவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அதனால், சிறிய வகை கத்தியால் குத்தியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.