sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 1 மாணவர்கள் மே 29 முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

/

பிளஸ் 1 மாணவர்கள் மே 29 முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 1 மாணவர்கள் மே 29 முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 1 மாணவர்கள் மே 29 முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்


UPDATED : மே 28, 2024 12:00 AM

ADDED : மே 28, 2024 05:02 PM

Google News

UPDATED : மே 28, 2024 12:00 AM ADDED : மே 28, 2024 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை நாளை மறுநாள்(மே 29) பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை மறுநாள் பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மே 31 (வெள்ளிகிழமை) காலை 11 மணி முதல் ஜூன் 4 (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

கட்டண விவரம்:

மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505
மறுகூட்டல்-II
உயிரியல்-ரூ.305
மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us