தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினம் பிளஸ் 1 மாணவிகள் ஆதங்கம்

ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினம் பிளஸ் 1 மாணவிகள் ஆதங்கம்

ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினம் பிளஸ் 1 மாணவிகள் ஆதங்கம்


UPDATED : மார் 11, 2025 12:00 AM

ADDED : மார் 11, 2025 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2025 12:00 AM ADDED : மார் 11, 2025 09:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னுார்:
ஆங்கில பாடத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவியர் தெரிவித்தனர்.

அன்னுார் வட்டாரத்தில், அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில், பிளஸ் 1 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன . நேற்று, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு ஆங்கில பாடத் தேர்வு நடந்தது.

தாரணிகா, குன்னியூர்:

ஆங்கில பாடத்தில், 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒரு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன.

நந்தினி, ஆனையூர்:
ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறுவது மிக எளிது. ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கேள்விகள் மிக எளிதாக இருந்தன.

மூன்று கேள்விகளில், இரண்டுக்கு மட்டும் பதிலளிக்கும் கேள்விகளிலும் தெரிந்த கேள்விகளே வந்திருந்தன. 90க்கு 60 மதிப்பெண் எளிதாக பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us