UPDATED : மே 09, 2025 12:00 AM
ADDED : மே 09, 2025 09:01 AM

சென்னை:
மார்ச் 2025-ஆம் ஆண்டின் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மே 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் தங்களுடைய பள்ளித் தலைமை ஆசிரியர் மூலமாகவோ அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிரிவிலோ தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம். தனித்தேர்வர்களும் இதே இணைய தளத்தில் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பெறும் விவரம்:
மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலைக் கோர மே 13 (செவ்வாய்) முதல் மே 17 (சனிக்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பாடத்திற்கும் நகலுக்கான கட்டணம் ரூ.275/- ஆகும். தேர்வர்கள் தங்கள் பள்ளியிலேயே கட்டணத்தை செலுத்த் வேண்டும். கட்டணம் முறையாக செலுத்தப்பட்ட பிறகு, விடைத்தாள் நகல் இணையதளம் வாயிலாக பெறலாம். நகல் பெற்ற மாணவர்கள், அடுத்து மீளாய்வு அல்லது மறுமதிப்பீடு செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

