பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்
UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 10:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :
இன்று நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
தமிழகம் முழுதும், 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவியர் உட்பட, 8 லட்சத்து 21,057 மாணவர்கள், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்று முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.