UPDATED : மே 08, 2025 12:00 AM
ADDED : மே 08, 2025 09:24 AM

சென்னை:
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03 சதவிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதிய 7,92,494 மாணவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 4,19,316 மாணவிகளில் 4,05,472 (96.70 %) பேரும், 3,73,178 மாணவர்களில் 3,47,670 (93.16 %) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 0.47 சதவிதம் மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக தேர்ச்சி சதவிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:
அரியலூர்-98.82 %
ஈரோடு- 97.98 %
திருப்பூர்- 97.53 %
கோவை- 97.48 %
கன்னியாகுமரி- 97.01 %
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.