தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்டம் பெறும் வகையில் தமிழ் எளிமை தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்

சென்டம் பெறும் வகையில் தமிழ் எளிமை தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்

சென்டம் பெறும் வகையில் தமிழ் எளிமை தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்


UPDATED : மார் 03, 2026 02:56 PM

ADDED : மார் 03, 2026 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2026 02:56 PM ADDED : மார் 03, 2026 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு மகிழ்ச்சியான தொடக்கத்தை தந்துள்ளது; தமிழ் தேர்வில் இடம் பெற்ற எளிமையான வினாக்களால் 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.

மதுரையில் பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:

அசத்தலான ஆரம்பம்


தேர்வு அறைக்குள் செல்லும் வரை மனதில் ஒருவித பயம் இருந்தது. வினாத்தாளை பெற்று வாசித்த போது எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சியாக தேர்வு எழுத ஆரம்பித்தேன்.

ஒரு மதிப்பெண் பகுதியில் அனைத்தும் எளிமை. மனப்பாடம் பகுதியில் அடிக்கடி எழுதிப்பார்த்த 'தெய்வமணி மாலை' பகுதி கேட்கப்பட்டது.

இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தன. தேர்வு ஆரம்பமே அசத்தலாக இருந்தது.

- பாண்டிச்செல்வி, பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எழுமலை.

நினைத்த மதிப்பெண் அள்ளலாம்


சாதாரணமாக படிக்கும் மாணவர்களும் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் பெறும் வகையில் வினாத்தாள் அமைந்துள்ளது. துணைப்பாடம் பகுதியில் 'பாரதியின் கடிதத்தில் மொழிப் பற்று, சமூகப்பற்று' என்ற முதல் பாடமே கேட்கப்பட்டிருந்தது.

அனைத்து மாணவர்களும் நன்கு எழுதி பார்த்தது தான். திருக்குறள் பகுதியிலும் எளிதானதே கேட்கப்பட்டது. முதல் மூன்று பாடங்களை நன்றாக படித்திருந்தால் நெடுவினா பகுதியில் முழு மதிப்பெண் பெறும் வகையில் இருந்தது.

- முகேஷ் குமார், லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, டி.கல்லுப்பட்டி.


பல தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்கள்



இரண்டு மதிப்பெண் பகுதியில் சில வினாக்கள் பாடங்களின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. 14 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட இலக்கணம் பகுதி மிக எளிமையாக இருந்தது. காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்களே நான்கு மதிப்பெண் பகுதியில் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. புத்தகத்தை முழுமையாக படித்திருந்ததால் முதல் தேர்வு எளிமையாக இருந்தது.

- ஷர்மிளா, சுந்தரேஸ்வரா வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேலுார்.

ஒரு மதிப்பெண் திருப்புதல் தேர்வு கைகொடுத்தது


ஒரு மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற 14 வினாக்களில் ஒன்றை தவிர அனைத்தும் எளிமை. கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் 'ஒரு மதிப்பெண் திருப்புதல் தேர்வு' நடத்த உத்தரவிட்டது. அதில் இடம் பெற்ற 100 வினாக்களில் 90 சதவீதத்திற்கும் மேலான வினாக்கள் பொதுத் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது. செய்யுள் பகுதியில் அடிக்கடி மாணவர்கள் எழுதிப் பழகிய நெடுநல் வாடையில் இடம் பெற்ற 'மழைக்கால வர்ணனை' இடம் பெற்றது.

இரண்டு, நான்கு மதிப்பெண் பகுதி, நெடுவினா பகுதியிலும் மாணவர், ஆசிரியர் எதிர்பார்த்த வினாக்களே இடம் பெற்றன. தமிழில் 'சென்டம்' எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

- ஜெயஷீலா, முதல்வர் மற்றும் தமிழாசிரியர், அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெருங்குடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us