தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவில் ஈரோடு முதலிடம் பிளஸ் 2 தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சி

மாநில அளவில் ஈரோடு முதலிடம் பிளஸ் 2 தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சி

மாநில அளவில் ஈரோடு முதலிடம் பிளஸ் 2 தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சி


UPDATED : மே 09, 2026 05:23 PM

ADDED : மே 09, 2026 05:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 05:23 PM ADDED : மே 09, 2026 05:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம், 98.87 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில், 221 அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10,497 மாணவர், 11,981 மாணவியர் என, 22,478 பேர் தேர்வெழுதினர். நேற்று வெளியான முடிவில், 10,331 மாணவர், 11,894 மாணவியர் என, 22,225 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 98.87 சதவீதமாகும்.

இதன் மூலம் மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டு மாநில அளவில், 97.98 சதவீத தேர்ச்சி பெற்று, ஈரோடு மாவட்டம் இரண்டாமிடம் பிடித்த நிலையில் நடப்பாண்டு, 0.89 சதவீத தேர்ச்சி சதவீதம் உயர்ந்து, முதலிடம் பெற்று சாதித்துள்ளது.

மாவட்டத்தில், 221 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், 128 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன. அது போல மாவட்டத்தில், 113 அரசு மேல்நிலைப்பள்ளி-களில், 4,723 மாணவர், 6,400 மாணவியர் என, 11,123 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இது, 98.24 சதவீத தேர்ச்சியாகும். இதனால் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்திலும், ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு, 96.88 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாமிடம் பெற்றிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us