செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 வெற்றி: இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 வெற்றி: இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
UPDATED : நவ 03, 2025 04:39 PM
ADDED : நவ 03, 2025 04:41 PM

புதுடில்லி:
இந்தியாவின் இதுவரை அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு செய்துள்ளதில்,“நமது விண்வெளித் துறை தொடர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நம் விஞ்ஞானிகளின் உழைப்பு, திறமை மற்றும் புதுமை இந்தியாவை விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் நிறுத்தியுள்ளது. அவர்களது சாதனைகள் தேசிய முன்னேற்றத்திற்கும், மக்களின் அதிகாரமளிப்பிற்கும் வழிவகுக்கின்றன,” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

