UPDATED : ஏப் 05, 2025 12:00 AM
ADDED : ஏப் 05, 2025 09:37 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான, க்சோ சட்டம் மற்றும் கற்பித்தல் குறித்து, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் கற்பக விநாயகா கல்வி குழுமம் இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கான கற்பித்தல், போக்சோ சட்டம் ஆகியவை குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு, மதுராந்தகம் கற்பக விநாயகா பொறியியல் கல்லுாரி அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் பங்கேற்று, பயிற்சியை துவக்கி வைத்தார்.
இந்த பயிற்சியில், போக்சோ சட்டத்தை பற்றிய அம்சங்கள் மற்றும் வழக்குகள், பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர் பாலியல் சீண்டல்கள் குறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
முதுகலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடப்பகுதியை கற்பித்தல், செயற்கை நுண்ணுறிவு பயன்பாடுகள், புதுமையான கற்பித்தல் நுணுக்கங்களை பயன்படுத்தி எவ்வாறு கற்பிப்பது என்பதை பற்றியும் பயிற்சி வழங்கப்பட்டது.
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், பொறியியல் கல்லுாரி குழுமம் இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை மற்றும் 750 முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

