தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்ட பயிற்சி

பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்ட பயிற்சி

பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்ட பயிற்சி


UPDATED : ஜூன் 13, 2025 12:00 AM

ADDED : ஜூன் 13, 2025 08:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2025 12:00 AM ADDED : ஜூன் 13, 2025 08:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
போக்சோ சட்டத்தின் கீழ், பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பது தொடர்பாக, டில்லி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் பயிற்சி முகாம், டில்லியில் துவக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி துவங்கிய இந்த பயிற்சி முகாம், வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்செர்ட் என்ற அமைப்பின் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், டில்லி அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்வி இயக்குனரக அதிகாரிகள், என்.சி.டி., எனும் டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆன்லைன் பயிற்சி முகாமில் சுழற்சி முறையில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, போக்சோ வழக்கின் அம்சங்கள், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள், எந்தெந்த வகைகளில் குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளது, எந்தெந்த வகைகளில் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற அம்சங்கள் விளக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்படும். அதில், குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெறும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என, இந்த நிகழ்ச்சியை நடத்தும், தீக் ஷா - லீடு என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us