UPDATED : ஜூன் 24, 2026 08:25 PM
ADDED : ஜூன் 24, 2026 08:27 PM
வெள்ளகோவில்:
மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், பொதிகை திறன் மேம்பாட்டு போட்டி நடந்தது.
வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் முத்தூர் ரோட்டில் உள்ள சுபஸ்ரீ மஹாலில் பொதிகை திறன் மேம்பாட்டு போட்டி நடந்தது. முதலாம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்று, தங்களது பல்வேறு திறமைகள், படைப்பாற்றல் மற்றும் தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளில், பேச்சு போட்டியில், 154 மாணவர்களும், ஓவியத்தில், 646 பேரும் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
மேலும், போட்டியில் வென்றவர்களுக்கு நடக்க உள்ள புத்தக திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், அறக்கட்டளையின் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
