தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவன் மீது போலீஸ் தாக்குதலா: நெல்லையில் பரபரபரப்பு

மாணவன் மீது போலீஸ் தாக்குதலா: நெல்லையில் பரபரபரப்பு

மாணவன் மீது போலீஸ் தாக்குதலா: நெல்லையில் பரபரபரப்பு


UPDATED : ஜூலை 03, 2025 12:00 AM

ADDED : ஜூலை 03, 2025 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2025 12:00 AM ADDED : ஜூலை 03, 2025 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:
தூத்துக்குடி, ஆதிச்சநல்லூரை சேர்ந்த மாயாண்டி என்பவரை தேடி நெல்லை வந்த தனிப்படை போலீசார் அவரது மகனை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என தூத்துக்குடி எஸ்.பி., மறுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரை சேர்ந்த மாயாண்டி ஒரு வழக்கில் தேடப்படுகிறார். இன்று அவரைத் தேடி திருநெல்வேலி வந்த தூத்துக்குடி தனிப்படை போலீசார், தனியார் பயிற்சி யில் பிளஸ்டூ பயிலும் அவரது மகன் 17 வயது சிறுவனை லத்தியாக் தாக்கி விசாரணைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாக சிறுவன் கூறினார். காயமுற்ற சிறுவன் தப்பி ஓடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மறுத்துள்ளார். சிறுவனின் தந்தை மாயாண்டி ஆதிச்சநல்லூரில் நிலப்பிரச்சனையில் தேடப்படுகிறார். இருப்பினும் தூத்துக்குடி போலீசார் திருநெல்வேலிக்கு வரவில்லை எனவும், தமது தந்தையை காப்பாற்றுவதற்காக சிறுவன் இத்தகைய செயலில் ஈடுபடலாம் எனவும் தூத்துக்குடி போலீசார் தெரிவித்துள்ளனர். எனவேசம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர போலீசார் விசாரிக்கின்றனர்.

மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது, போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us