UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 12:18 PM

இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் போலந்து நாட்டில் குறுகிய கால ஆய்வு மேற்கொள்ள, யுனெஸ்கோ / போலந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மொத்தம் 30 பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் மாணவர்கள் போலந்தில் உள்ள 'ஏ.ஜி.எச்., யுனிவர்சிட்டி ஆப் கிராகோவ்' கல்வி நிறுவனத்தில் அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை குறுகியகால திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
கால அளவு:
6 மாதங்கள்
துறைகள்:
பயோமெடிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அண்டு இன்பர்மேஷன் சயின்சஸ், எர்த் அண்டு என்விரான்மெண்டல் சயின்சஸ், என்விரான்மெண்டல் இன்ஜினியரிங், மைனிங் அண்டு எனர்ஜி, மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பிசிக்கல் சயின்சஸ் மற்றும் சோசியாலஜி.
தகுதிகள்:
ஆராய்ச்சி திட்டம், துறையை பொறுத்து தகுதிகள் மாறுபடுகின்றன. போதிய ஆங்கில மொழிப்புலமை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 32 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய மாணவ, மாணவிகள் யுனெஸ்கோ உடனான இந்திய தேசிய ஒத்துழைப்பு ஆணையம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். யுனெஸ்கோவிற்கு நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.
சலுகைகள்:
இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், தங்குமிட செலவினங்களுக்காக பி.எஸ்சி., மாணவர்களுக்கு மாதம் 37 ஆயிரம் ரூபாய், எம்.எஸ்சி., மாணவர்களுக்கு 45 ஆயிரம் ரூபாய், சிறப்பு சலுகையாக ஒரு முறை அதே அளவு தொகை, போலந்து சென்று திரும்புவதற்கான விமானக் கட்டணம், மருத்துவ காப்பீடு, இதர செலவினங்களுக்காக ஒருமுறை 120 அமெரிக்க டாலர் ஆகியவை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஏப்ரல் 29
விபரங்களுக்கு:
இணையதளம்:
www.education.gov.in
இமெயில்:
inc.edu@nic.in