sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதுச்சேரி பல்கலையில் புதிய படிப்பு துணை வேந்தர் பிரகாஷ்பாபு தகவல்

/

புதுச்சேரி பல்கலையில் புதிய படிப்பு துணை வேந்தர் பிரகாஷ்பாபு தகவல்

புதுச்சேரி பல்கலையில் புதிய படிப்பு துணை வேந்தர் பிரகாஷ்பாபு தகவல்

புதுச்சேரி பல்கலையில் புதிய படிப்பு துணை வேந்தர் பிரகாஷ்பாபு தகவல்


UPDATED : பிப் 23, 2026 12:00 PM

ADDED : பிப் 23, 2026 12:03 PM

Google News

UPDATED : பிப் 23, 2026 12:00 PM ADDED : பிப் 23, 2026 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
விருந்தோம்பல் மேலாண்மை புதிய முதுகலை படிப்பு துவங்கப்படும் என, துணைவேந்தர் பிரகாஷ் பாபு தெரிவித்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுலா துறை சார்பில், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சந்திப்பு நிகழ்ச்சி அகன்ஷா என்ற பெயரில், பல்கலைக்கழத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு இயக்குநர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். பேராசிரியர் சிபி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ருமான ஷெர்ரி ஆபிரகாம் நோக்கவுரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக மார்வெல் டூர்ஸ், நிர்வாக இயக்குநர் செஜோ ஜோஸ் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள புதுமை, கல்வி நிறுவனங்கள் பாட நெறிமுறைகள் ஏற்பட்டுள்ள இடைவெளி குறித்து பேசினர்.

சந்திப்பு


நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று விவாதித்தனர். சுற்றுலா, விருந்தோம்பல், பயண தொழில்நுட்பம், நிலைத் தன்மை மற்றும் அனுபவ சுற்றுலா போன்ற வளரும் துறைகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது. சர்வதேச கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைகழக மாணவர்கள் பங்கேற்றனர்.

பேராசிரியர் ஆக்னஸ் டேவிட்சோன் ஆய்வு மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். நிறைவு விழாவில் பங்கேற்றதுணை வேந்தர் பிரகாஷ் பாபு, பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட இறுதி ஆண்டு எம்.பி.ஏ., மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். அவர் பேசுகையில், 'அடுத்த கல்வி ஆண்டு முதல் விருந்தோம்பல் மேலாண்மை புதிய முதுகலை படிப்பு தொடங்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us