தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நந்தா பொறியியல் கல்லுாரியில் முதுகலை பாடவகுப்பு துவக்கம்

நந்தா பொறியியல் கல்லுாரியில் முதுகலை பாடவகுப்பு துவக்கம்

நந்தா பொறியியல் கல்லுாரியில் முதுகலை பாடவகுப்பு துவக்கம்


UPDATED : ஆக 18, 2026 01:20 PM

ADDED : ஆக 18, 2026 01:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 01:20 PM ADDED : ஆக 18, 2026 01:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரியில், முதுகலை துறைகளுக்கான முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் துவக்கி வைத்தார்.

ஈரோடு லயன்ஸ் கிளப் முன்னாள் சர்வதேச இயக்குனர் தனபாலன் சிறப்பு விருந்தினராகவும், கல்லுாரி முன்னாள் மாணவரும் கோவை ஈ.பி.ஏ.எம்., நிறுவன பொறியாளர் மீனாட்சி சுந்தரம், கவுரவ விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் திருமூர்த்தி, கல்லுாரி முதல்வர் ரகுபதி, நந்தா தொழில்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர், மாணவர்களை வரவேற்று பேசினர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை முதுகலை நிர்வாகத்துறை தலைவர் சரவணன், கணினி துறை தலைவர் சுகுணா, பேராசிரியர்கள் மற்றும் முதுகலை முதலாமாண்டு மாணவர், நேரடி சேர்க்கை பெற்ற இரண்டாமாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us