UPDATED : நவ 24, 2025 08:24 AM
ADDED : நவ 24, 2025 08:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில செயற்குழு கூட்டம், சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
கூட்டத்தில் மாநில சிறப்பு தலைவர் மணிவாசகன் தலைமை வகித்தார். வரவேற்புரை மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் நிகழ்த்தினார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட, 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி, டிச.,13ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அந்த போராட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொள்ளவேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

