இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு
UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 06:40 PM

புதுடில்லி:
இன்று( ஜூலை 06) துவங்குவதாக இருந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மே 5 ல் நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே, இளநிலை நீட் கவுன்சிலிங்கை ஒத்திவைக்க வேண்டும் என நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், கவுன்சிலிங்கை ஒத்திவைக்க உத்தரவிட மறுத்துவிட்டது. இது குறித்து பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விரைவில்
இந்நிலையில், இன்று துவங்க இருந்த இளநிலை மருத்துவ கவுன்சிலிங் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கவுன்சிலிங் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவுன்சிலிங் நடைமுறை
நீட் கவுன்சிலிங் நடைமுறையானது பல சுற்றுகளை கொண்டது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் முதலில், பதிவு செய்ய வேண்டும். கவுன்சிலிங் கட்டணத்தை செலுத்திவிட்டு, தங்கள் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்த பிறகு தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். நேரடியாக கல்வி மையத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்.