UPDATED : பிப் 27, 2025 12:00 AM
ADDED : பிப் 27, 2025 10:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (27ம் தேதி) நடக்கிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு கடந்த, 22ம் தேதி துவங்கி நாளை, (28ம் தேதி) வரை நடக்கிறது. அதில், தனித்தேர்வர்களுக்கான செய்முறை தேர்வு இன்று நடக்கிறது.
கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சியில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 27ம் தேதி (இன்று) நடக்கிறது. மொத்தம், 101 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.