சென்னை பல்கலை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி முர்மு
சென்னை பல்கலை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி முர்மு
UPDATED : டிச 30, 2025 11:54 AM
ADDED : டிச 30, 2025 11:55 AM

சென்னை பல்கலை துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்ட மசோதாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு திருப்பி அனுப்பினார்
தமிழக உயர் கல்வித் துறை கட்டுப்பாட்டில், பதிமூன்று பல்கலைகள் இயங்கி வருகின்றன. பல்கலை துணைவேந்தர்களை, சட்ட விதிகளின்படி கவர்னர் நியமனம் செய்கிறார்.
துணைவேந்தரை நியமிக்க, தேடுதல் குழு அமைக்கும் விவகாரத்தில், கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடித்தது. இதையடுத்து, பல்கலை துணைவேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும், தமிழக அரசுக்கே அதிகாரம் வழங்கும் வகையில், சட்டசபையில், இரண்டாயிரத்து இருபத்து இரண்டில், பல்கலை சட்டங்களில் திருத்தம் செய்து, ஆளும் தி.மு.க., அரசு மசோதா நிறைவேற்றியது. சென்னை பல்கலைக்கு ஒரு மசோதா, மற்ற பன்னிரண்டு பல்கலைகளுக்கு பொதுவான மசோதா நிறைவேற்றப்பட்டது
இந்த மசோதாக்கள், கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இவற்றுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை பல்கலை துணைவேந்தர் நியமனம் குறித்த மசோதாவை, இரண்டாயிரத்து இருபத்து இரண்டு ஏப்ரலில், கவர்னர் ரவி ஜனாதிபதிக்கு அனுப்பினார்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மசோதாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று திருப்பி அனுப்பினார்.

