sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை: அதிபர் டிரம்ப் உத்தரவு

/

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை: அதிபர் டிரம்ப் உத்தரவு

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை: அதிபர் டிரம்ப் உத்தரவு

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை: அதிபர் டிரம்ப் உத்தரவு


UPDATED : மே 23, 2025 12:00 AM

ADDED : மே 23, 2025 08:12 PM

Google News

UPDATED : மே 23, 2025 12:00 AM ADDED : மே 23, 2025 08:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:
வெளிநாட்டு மாணவர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் ஹார்வர்டு பல்கலை உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் இந்த பல்கலையில் உள்ள சமத்துவம் மற்றும் பன்முக திட்டங்களை நிறுத்தும்படியும், பேராசிரியர்களுக்கான அதிகாரத்தை குறைக்கவும் வழிகாட்டுதல்களை பிறப்பித்தது.

இதை ஏற்க மறுத்ததால், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த, 18,500 கோடி ரூபாய் நிதியுதவியை டிரம்ப் நிறுத்தினார். இது தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இதனால் கோபம் அடைந்த டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சலுகையை ரத்து செய்தார்.

தற்போது, வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி கூறியதாவது:

வன்முறை, யூத எதிர்ப்பு ஆகியவற்றை வளர்க்க துணை போவதால் ஹார்வர்டு பல்கலை மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்து, அவர்களின் கல்விக் கட்டணத்திலிருந்து பயனடைவது பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சலுகை, உரிமை அல்ல. சரியானதைச் செய்ய ஹார்வர்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. அது மறுத்துவிட்டது. சட்டத்தை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us