தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் 18ல் வெளியீடு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் 18ல் வெளியீடு
UPDATED : செப் 14, 2024 12:00 AM
ADDED : செப் 14, 2024 05:14 PM
சென்னை:
கடந்த ஜூன்/ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் வரும் 18ம் தேதி வெளியாகிறது.
இத்தேர்வு எழுதிய முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வரும் 18ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தெரிந்து கொள்ளலாம்.
மறுகூட்டல் மற்றும் ஒளிநகல் பெற விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் ஒளிநகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ.275, விடைத்தாள் மறுகூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.