வரும் 10ல் அடையாள வேலை நிறுத்தம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முடிவு
வரும் 10ல் அடையாள வேலை நிறுத்தம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முடிவு
UPDATED : செப் 02, 2024 12:00 AM
ADDED : செப் 02, 2024 09:43 AM

நாமக்கல்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாவட்ட விரைவு சிறப்பு செயற்குழு கூட்டம். நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் ஜீவாபாய் வரவேற்றார்.மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாரதி, துணைத் தலைவர் சுமதி, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில், மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம், தமிழகத்தில் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியருக்கு வழங்க வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை, பள்ளி ஆசிரியருக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்பதை கைவிட வேண்டும் உள்பட 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டிட்டோஜாக் மாநில அமைப்பு வரும், 10ல் மேற்கொள்ளும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.