UPDATED : ஆக 11, 2025 12:00 AM
ADDED : ஆக 11, 2025 11:25 AM
பெங்களூரு:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தயாராகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்ற அக்டோபர் 27ம் தேதி வரை, கால அவகாசம் அளித்துள்ளனர்.
இது குறித்து, தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் சந்திரசேகர் நுக்கலி கூறியதாவது:
பதவி உயர்வு, பணி பாதுகாப்பு உட்பட பல கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துள்ளோம். ஏற்கனவே நாங்கள் போராட்டம் நடத்திய போது, எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அரசு உறுதி அளித்தது.
ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆகஸ்ட் 12ம் தேதியன்று, மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம், முதல்வர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் துறையின் தலைமை செயலரிடம், கோரிக்கை மனு அளிப்போம். கோரிக்கைகளை நிறைவேற்ற ஆகஸ்ட் 27ம் தேதி வரை, அரசுக்கு கால அவகாசம் அளிப்போம்.
அதற்குள் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், செப்டம்பர் 3ம் தேதியன்று, மாநிலத்தின் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், விடுமுறை எடுத்து கொண்டு, பெங்களூரின் சுதந்திர பூங்காவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

