UPDATED : அக் 04, 2025 10:09 AM
ADDED : அக் 04, 2025 10:10 AM
பொள்ளாச்சி:
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிணத்துக்கடவு வட்டார அமைப்புக்கிளை துவக்க விழா, சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கநாத மூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தங்கபாசு, மாநில துணை தலைவர் வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 10 பேர் கொண்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டு, அமைப்பாளராக கனிராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைவருக்கும் உறுப்பினர் ரசீது வழங்கப்பட்டது. ஆசிரியர் சமுதாயத்துக்கு ஏற்படும் பிரச்னைகள், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முன் நின்று போராடும் என, தெரிவித்தனர்.
செயலாளர் சிவக்குமார், தலைவர் நாகராஜ், வட்டார செயலாளர்கள் முருகேசன், பழனிகுமார் மற்றும் வட்டார தலைவர் சவுந்தர்ராஜ், பொள்ளாச்சி கல்வி மாவட்ட தலைவர் குமரகுருபரன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பேசினர். ஆசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார்.