உலகெங்கும் தமிழ் மொழியை பரப்பும் பிரதமர் மோடி; கவர்னர் ரவி நன்றி
உலகெங்கும் தமிழ் மொழியை பரப்பும் பிரதமர் மோடி; கவர்னர் ரவி நன்றி
UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 09:51 AM
சென்னை:
தமிழ் மொழியையும், திருக்குறளையும் உலகெங்கும் கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு நன்றி என்று கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்:
உலகம் எங்கும் தமிழ் மொழியையும், திருக்குறளின் புகழையும் கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு நன்றி. உலகளவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களில் தமிழ் மொழிக்கான இருக்கைகள் உருவாக்கம், சிங்கப்பூரில் திருவள்ளுவர் மையம், அண்மையில் மத்திய அரசு சார்பில் பிஜியில் தமிழ் மொழிக்கான நிகழ்ச்சி என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இது பிஜியில் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்காக மட்டும் அல்லாமல், தமிழ் மொழியின் பழமையை பாதுகாக்கும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. மேலும், அழகிய தமிழ் மொழியை பிறரும் கற்றுக் கொள்ள வழிவகுத்துள்ளது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.