sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

2025-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் தொடக்கம்

/

2025-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் தொடக்கம்

2025-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் தொடக்கம்

2025-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் தொடக்கம்


UPDATED : ஜன 17, 2025 12:00 AM

ADDED : ஜன 17, 2025 11:35 AM

Google News

UPDATED : ஜன 17, 2025 12:00 AM ADDED : ஜன 17, 2025 11:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2025-ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்திற்கான ஒருமுறை வழங்கும் சிறப்பு நிதியுதவி திட்டத்தை நீட்டிக்க அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கிடைப்பதை உறுதி செய்கிறது.

ஜனவரி 3 அன்று, டில்லியில் குடிசைகள் இருந்த அதேப்பகுதியில் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 1,675 குடியிருப்புகளை பிரதமர் மோடி உரியவர்களிடம் ஒப்படைத்தார். சூரஜ்மல் விஹாரின் கிழக்கு வளாகம், துவாரகாவின் மேற்கு வளாகம், நஜாஃப்கரின் வீர் சாவர்க்கர் கல்லூரி உட்பட மாற்றத்தை ஏற்படுத்தும் ரூ. 600 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மூன்று கல்வித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

ஜனவரி 4- அன்று நடைபெற்ற கிராமிய பாரத மகோத்சவம் ஜிஐ-சான்றளிக்கப்பட்ட கிராம தயாரிப்புகளை ஊக்குவித்து, கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தியது. மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா உள்ளிட்ட உலகளாவிய தொழில்நுட்ப தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்கள் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தனர்.

ஜனவரி 5 அன்று சாஹிபாபாத்தை அசோக் நகருடன் இணைக்கும் நமோ பாரத் ரயில் வழித்தடத் தொடக்கம், ஒடிசா, தெலங்கானா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பல ரயில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுடன் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்கம் ஆகியன வேகம் பெற்றன.

ஜனவரி 7 அன்று, இறக்குமதி செய்யப்பட்ட மருந்து பொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு ரூ.1,877 கோடி மதிப்புள்ள மருந்து பூங்கா, நாளொன்றுக்கு 1,500 டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பசுமை ஹைட்ரஜன் மையம் என்ற இரண்டு முக்கியமான திட்டங்களை ஆந்திராவில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

ஜனவரி 9 அன்று ஜீனோம் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் அறிவியலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இது இந்தியர்களின் மரபணு பன்முகத்தன்மையை வரைபடமாக்குகிறது; மரபணு கோளாறுகளுக்கான சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்துகிறது. அதே நாளில், புவனேஸ்வரில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்திய புலம்பெயர்ந்தோரின் சாதனைகளையும், உலக அரங்கில் அவர்களின் பங்களிப்புகளையும் பிரதமர் பாராட்டினார் .

தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 12 அன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ஜனவரி 13 அன்று, ஜம்மு-காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார், இது போக்குவரத்து இணைப்பையும், தேசப்பாதுகாப்பையும், சுற்றுலாவையும் மேம்படுத்துகிறது. தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜனவரி 15-அன்று புதிய கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட மேம்பட்ட கப்பல்களை கடற்படையில் இணைக்கப்படது. இந்த இணைப்புகள் இந்தியப் பெருங்கடலில் ஒரு மேலாதிக்க சக்தியாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துகின்றன. மேலும் பாதுகாப்பில் தற்சார்பு இந்தியாவுக்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்றாகும்.

ஜனவரி 16 அன்று, செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் வெற்றிகரமான செயல்பாட்டுடன் இஸ்ரோவால் நிறைவு செய்யப்பட்ட திட்டத்தின் மூலம், இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கான பிரதமர் மோடியின் பார்வையானது மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

வெறும் 15 நாட்களில், 2025-ம் ஆண்டின் மாற்றத்திற்கான தொடக்கத்தை பிரதமர் மோடியின் தலைமை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் முதல் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், கலாச்சார கொண்டாட்டங்கள் வரை, அவரது செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன.

நாம் ஒன்றிணைந்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைக்கிறோம், அங்கு ஒவ்வொரு குடிமகனும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us