அறிவியல் செய்முறை பயிற்சிக்கு தனித்தேர்வர்கள் பதிவு செய்யலாம்
அறிவியல் செய்முறை பயிற்சிக்கு தனித்தேர்வர்கள் பதிவு செய்யலாம்
UPDATED : செப் 14, 2026 12:53 PM
ADDED : செப் 14, 2026 12:58 PM
கோவை:
2026 - 27ம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன.
முதன்முறையாக அனைத்துப் பாடங்களையும் எழுதும் நேரடித் தனித்தேர்வர்களும், 2012ம் ஆண்டுக்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் பங்கேற்கலாம்.
விண்ணப்பத்தை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நாளை முதல் 30ம் தேதி வரை கோவை மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகத்தில் ரூ.125 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
இது பயிற்சி வகுப்பிற்கான பதிவு மட்டும் என்பதால், கல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில், தேர்வர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இப்பயிற்சி வகுப்புகளில் குறைந்தது, 80 சதவீத வருகைப் பதிவு பெற்றவர்கள் மட்டுமே இறுதி செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என, மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
