தனியார் கல்லுாரி கட்டடங்கள் ஊரக வளர்ச்சி துறையினர் ஆய்வு
தனியார் கல்லுாரி கட்டடங்கள் ஊரக வளர்ச்சி துறையினர் ஆய்வு
UPDATED : டிச 16, 2025 09:10 AM
ADDED : டிச 16, 2025 09:17 AM
சூலூர்:
சூலூர் அருகே உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளந்தனர்.
சூலூர் அடுத்துள்ள சின்னியம் பாளையம் பகுதியில் தனியார் கல்லூரி செயல்படுகிறது. உள்ளூர் திட்ட குழுமத்தின் உரிய அனுமதி இல்லாமல் பல கட்டடங்கள், லட்சக்கானக்கான சதுர அடிகளில் கட்டப்பட்டுள்ளதை அறிந்த, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், உரிய பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.
உரிய பதில் இல்லாததால், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசமூர்த்தி, முத்துராஜூ மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் சரவணன், அருண், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட குழுவினர், கட்டடங்களை டிரோன்கள் வாயிலாக அளந்தனர்.
'இதுகுறித்து அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்படும். அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஊரக வளர்ச்சித்துறையினர் கூறினர்.

