தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் 23ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 23ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 23ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : ஜன 22, 2026 10:42 AM

ADDED : ஜன 22, 2026 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2026 10:42 AM ADDED : ஜன 22, 2026 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் இம்மாதம், 23ம் தேதி நடக்கிறது.

இம்மையத்தின் வாயிலாக மாதந்தோறும் தனியார் துறை சார்பாக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாத முகாம், 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, 10:00 மணிக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடக்கிறது.

முகாமில், 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் பங்கேற்று பயன் பெறலாம். பங்கேற்க வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனத்தினர் மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வானவர்களுக்கு நியமன ஆணை உடனடியாக வழங்கப்படுகிறது.

நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

விருப்பமுள்ள மனுதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்துக்கு நேரடியாக வரலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us