தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கள்ளக்குறிச்சியில் வரும் 22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் வரும் 22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் வரும் 22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : மே 17, 2026 01:05 PM

ADDED : மே 17, 2026 01:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 01:05 PM ADDED : மே 17, 2026 01:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் வரும் 22ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:



கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 22ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை முகாம் நடக்கிறது.

முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, கட்டுமானம், காப்பீடு, சில்லரை விற்பனை துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கேற்ப பணியாட்களை தேர்வு செய்கின்றனர்.

மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., படிப்பு முடித்த ஆண்கள், பெண்கள் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைதளம் மூலம் பதிவு செய்து முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us