தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவ., 27ல் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

நவ., 27ல் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

நவ., 27ல் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : நவ 24, 2026 11:33 AM

ADDED : நவ 24, 2026 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:33 AM ADDED : நவ 24, 2026 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
'செங்கல்பட்டில், தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது' என, கலெக்டர் வீரப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது;


செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளது.

இம்மையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வரும் 27ம் தேதி காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை, தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு 18 வயது முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல், சுயவிபர குறிப்பு மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 044 - 27426020; 94990 55895; 94868 70577 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us