UPDATED : ஜூன் 17, 2025 12:00 AM
ADDED : ஜூன் 17, 2025 03:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: 
பெங்களூரு கித்வாய் மருத்துவமனை அருகில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தனியாக பள்ளி துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் சொல்லித்தரப்படும். அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். ஜூலை முதல் இப்பள்ளியை துவங்க திட்டமிட்டு உள்ளோம். ஷிவமொக்காவின் ரூரல் பகுதிகளுக்கு, இன்போசிஸ் நிறுவனம், 200 கோடி ரூபாய் நிதி வழங்கும். 
வரும் நாட்களில் இங்கு அதிக பள்ளிகள், கல்லுாரிகள் துவங்கப்படும். மாநில வரலாற்றில் முதன் முறையாக கல்வி கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், பள்ளிகளுக்கு உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் என துவக்க கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.

