UPDATED : ஜூலை 27, 2026 01:10 PM
ADDED : ஜூலை 27, 2026 01:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
ஜெ., அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி ஆரோ சிட்டி சார்பில், உப்பளம் இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
ஜெ., அறக்கட்டளை தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பங்கேற்று, வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார். முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.
இதில் 10வது மற்றும் பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளோமா, பி.டெக், எம்.டெக், எம்.சி.ஏ., மற்றும் பட்டதாரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
