UPDATED : ஆக 09, 2024 12:00 AM
ADDED : ஆக 09, 2024 10:23 AM
கஜூரி காஸ்:
டில்லி பள்ளியின் மேலாளர் அறைந்ததில் 12 வயது சிறுவனுக்கு காதில் காயம் ஏற்பட்டது.
வடகிழக்கு டில்லியின் கஜூரி காஸ் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவனை, பள்ளியின் மேலாளர் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுவனின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது.
காதில் வலி இருப்பதாக சிறுவன் கூறியதால், பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மோசமான கையெழுத்திற்காக சிறுவனை பள்ளி மேலாளர் அடித்ததாக தெரிய வந்தது. கடந்த மாதம் 20ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து புகார் வந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர். எனினும் பள்ளி நிர்வாகத்துடன் சிறுவனின் பெற்றோர் சமரசம் செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.