தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3ம் நாள் காத்திருப்பு போராட்டம்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3ம் நாள் காத்திருப்பு போராட்டம்
UPDATED : ஏப் 26, 2025 12:00 AM
ADDED : ஏப் 26, 2025 08:56 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 770 நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால், அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கோர்ட் மூலம் பணிநிரந்தரம் செய்ய ஆணையை பெற்று வந்துள்ள ஆசிரியர்களுக்கு, காலம் கடத்தாமல் பணி நியமன ஆணையை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்டவைகளைவலியுறுத்தி, கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

