கல்வி உரிமை தொகையை விடுவிக்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்
கல்வி உரிமை தொகையை விடுவிக்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்
UPDATED : செப் 02, 2025 12:00 AM
ADDED : செப் 02, 2025 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கை மாநாடு நடந்தது.
மாநில தலைவர் ஆனந்தகு மார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாத ஆர்.டி.இ., எனப்படும், கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழான தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். 10 ஆண்டுகள் செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். தனியார் பள்ளி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

