தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் துறை வேலைவாய்ப்பு 8ல் கிருஷ்ணகிரியில் முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு 8ல் கிருஷ்ணகிரியில் முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு 8ல் கிருஷ்ணகிரியில் முகாம்


UPDATED : ஆக 07, 2026 04:54 PM

ADDED : ஆக 07, 2026 04:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2026 04:54 PM ADDED : ஆக 07, 2026 04:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 8ம் தேதி (சனிக்கிழமை) காலை, 09:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணி வரை கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் நடக்கிறது.

இதில், கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ என அனைத்துவித கல்வி தகுதியினரும் கலந்து கொள்ளலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 - 291983 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us